ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தாலுகா அலுவலகம்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் தாலுகா அலுவலகம் உள்ளது. தாசில்தாராக சைலஜா பணியாற்றி வருகிறார். இந்த தாலுகா அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் அனுப்பி வந்தனர். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் நேற்று மாலை 5 மணிக்கு ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்திற்கு திடீரென்று வந்தனர். அப்போது அலுவலகத்தில் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் சிலர் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் தாலுகா அலுவலகத்திற்குள் நுழைந்ததும் அலுவலக கதவை பூட்டினார்கள். இதனால் உள்ளே இருந்து யாரும் வெளியே வரவும் இ்ல்லை. அலுவலகத்திற்குள் யாரும் செல்லவும் இல்லை.பின்னர் அலுவலர்கள் அனைவரும் வெளியில் தொடர்பு ெகாள்ளாதவாறு செல்ேபான்களை சுவிட்ச் ஆப் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர். அதை தொடர்ந்து அலுவலர்கள் அனைவரும் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்தனர். அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.80 ஆயிரம் பறிமுதல்
மேலும் பீரோக்களில் லஞ்சப்பணத்தை மறைத்து உள்ளார்களா? என்றும் தேடிப்பார்த்தனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்து 70 கைப்பற்றப்பட்டது. இந்த பணம் அங்கிருந்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பீரோக்களில் இருந்து கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதனால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.