பெருமாள் கோவிலில் ராமநவமி விழா பாம்பு புகுந்ததால் பரபரப்பு


பெருமாள் கோவிலில் ராமநவமி விழா பாம்பு புகுந்ததால் பரபரப்பு

திருப்பூர்

சேவூர்

விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். இந்த ராம அவதாரத்தை பெருமாள் கோவில்களில் ராம நவமியாக மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமநவமி விழாவை முன்னிட்டு சேவூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவிலில் நேற்று காலை 10மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெருமாளுக்கு, திரவிய அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அப்போது சாமிசிலை அருகில் பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து அவினாசி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு 3 அடி நீளம் கொண்ட விஷத்தன்மை கொண்ட சுருட்டை வகையை சார்ந்த பாம்பு என கூறினர். பின்னர்பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.


Next Story