குமரி தம்பதி குடும்பத்தினருக்கு விஜய் வசந்த் எம்.பி. நேரில் ஆறுதல்


குமரி தம்பதி குடும்பத்தினருக்கு  விஜய் வசந்த் எம்.பி. நேரில் ஆறுதல்
x

மாலத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குமரி தம்பதியின் குடும்பத்தினருக்கு விஜய் வசந்த் எம்.பி. நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கன்னியாகுமரி

குழித்துறை,

மாலத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குமரி தம்பதியின் குடும்பத்தினருக்கு விஜய் வசந்த் எம்.பி. நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கணவன்- மனைவி பலி

மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு கொல்லன்விளாகம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஜெனில் (வயது43). இவர் மாலத்தீவில் காண்டிராக்டராக வேலை பார்த்து வந்தார். இதற்காக தனது மனைவி சுகுணாவுடன் (40) மாலத்தீவு மாலேயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்.

சம்பவத்தன்று நள்ளிரவில் இவர்கள் தூங்கி கொண்டிருந்த போது அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் எட்வின் ஜெனிலும் அவர் மனைவி சுகுணாவும் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்கள் அங்குள்ள போலீசாரால் அடையாளம் காணப்பட்டு மாலியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மேலும் 8 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

விஜய் வசந்த் எம்.பி. ஆறுதல்

எட்வின் ஜெனில் தனது மனைவியுடன் உயிரிழந்த தகவல் அறிந்ததும் அவரது சொந்த ஊரான காஞ்சிரகோடு கொல்லன்விளாகம் பகுதியில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெரும் சோகம் அடைந்தனர். அவர்களது உடல்களை ெசாந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சியில் உறவினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று கொல்லன்விளாகத்தில் உள்ள எட்வின் ஜெனில் வீட்டுக்கு விஜய்வசந்த் எம்.பி. நேரில் சென்றார். அங்கு எட்வின் ஜெனிலின் தாயார் புஷ்பலீலா மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story