எம்.பி. விஜய் வசந்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பு பேனா மாயம் - போலீசார் விசாரணை


எம்.பி. விஜய் வசந்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பு பேனா மாயம் - போலீசார்  விசாரணை
x

ரூ.1.50 லட்சம் மதிப்பிலான அந்த பேனா காணாமல் போயிருப்பது விஜய் வசந்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எதிர்க்கட்சிகளின் குடியரசு வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவு கோரும் பொருட்டு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டார். விஜய் வசந்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா மாயமாகியுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த விஜய் வசந்த் பேனாவை யாரேனும் திருடி இருக்கலாம் என்று சந்தேகித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

காணாமல் போயிருக்கும் பேனா விஜய் வசந்தின் தந்தையும், கன்னியாகுமரியின் முன்னாள் எம்பியுமான வசந்தகுமார் பயன்படுத்திய பேனாவாகும். தந்தை இறந்த பிறகு அதே தொகுதியில் எம்.பியாக வெற்றி பெற்ற விஜய் வசந்த் தந்தையின் நினைவாக அந்த பேனாவை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான அந்த பேனா காணாமல் போயிருப்பது விஜய் வசந்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story