விஜயகாந்த் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்: ரஜினிகாந்த் டுவிட்


விஜயகாந்த் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்: ரஜினிகாந்த் டுவிட்
x

கோப்புப் படம்

நீரிழிவு நோயால் தொடர்ந்து அவதியுற்று வந்த விஜயகாந்தின் 3 கால் விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.

சென்னை,

தே.மு.தி.க. தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அரசியலை விட்டு ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், விஜயகாந்தின் வலது கால் விரல்கள் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாதது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் மியாட் ஆஸ்பத்திரியில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு நீண்ட காலமாக நீரிழிவு நோய் இருந்து வந்ததால், வலது கால் விரல்கள் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து, வலது காலில் கட்டை விரல் உள்பட 3 விரல்களை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, அறுவை சிகிச்சை மூலம் குறிப்பிட்ட 3 விரல்களும் அகற்றப்பட்டன. தற்போது, ஆஸ்பத்திரியிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜயகாந்த் விரைவில் குணம் அடைய இறைவனிடம் வேண்டுவதாக என்று நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்றார்.


Next Story