தண்டவாள பராமரிப்பு பணி; சென்னை சென்டிரல் - பிட்ரகுண்டா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து


தண்டவாள பராமரிப்பு பணி;  சென்னை சென்டிரல் - பிட்ரகுண்டா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
x

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல் - பிட்ரகுண்டா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விஜயவாடா பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக ரத்து செய்யப்படும் ரெயில்கள், 7- ந்தேதி முதல் 11- ந்தேதி வரை பிட்ரகுண்டாவிலிருந்து காலை 4.45 மணிக்கு சென்னை சென்டிரல் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண். 17237) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, இதே தேதிகளில் சென்னை சென்டிரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு பிட்ரகுண்டா நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17238) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.


Next Story