மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்திற்குவிகாஷ் என்ஜின் சோதனை வெற்றி


மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்திற்குவிகாஷ் என்ஜின் சோதனை வெற்றி
x

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்திற்கு விகாஷ் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது.

திருநெல்வேலி

பணகுடி:

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் அமைந்துள்ளது. இங்கு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு செயற்கைகோள்களை கொண்டு செல்லும் விகாஷ் என்ஜின் தயாரிக்கும் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்த என்ஜின் சோதனை 240 வினாடிகள் நடைபெற்றது.

இந்த சோதனையானது இஸ்ரோ தலைவர் சோமநாத், உந்தும வளாக இயக்குனர் ஆசீர் பாக்யராஜ், விக்ரம்சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் உன்னி கிருஷ்ணன், திரவ இயக்க வளாக இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் கட்டன் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த சோதனையானது வெற்றிகரமாக நடைபெற்றதாக விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story