அபாய நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்
கொங்கராயநல்லூர் ஊராட்சியில் அபாய நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டப்படுமா?என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி:
கொங்கராயநல்லூர் ஊராட்சியில் அபாய நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டப்படுமா?என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலகம்
நாகை மாவட்டம் கொங்கராயநல்லூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது.இந்த அலுவலகத்திற்கு கொங்கராயநல்லூர், சகடமங்கலம் பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு சான்றிதழ் பெற நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்த கட்டிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் பாரமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த அலுவலக கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது.
கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது. இதனால் அம்பலில் தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது.
இடிக்க வேண்டும்
கிராம நிர்வாக அலுவலகம் எங்கு செயல்படுகிறது என்று தெரியாமல் பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்ைக விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் அபாய நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.