கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை


கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆலங்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி தாலுகா வேங்கிடகுளம் பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவருடைய மகன் ரெத்தினம் ஆன்றோ (வயது 28). இவர் கத்தக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் இவர் உணவு சாப்பிட வராததால் வீட்டின் மாடியில் உள்ள அவரது அறைக்கு பீட்டர் சென்று பார்த்தார். அப்போது ரெத்தினம் ஆன்றோ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story