கிராம நிர்வாக அலுவலர் மர்மசாவு
திண்டுக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் இறந்தார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 52). இவர் நத்தம் அருகே உள்ள ஆவிளிபட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த அவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story