கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை வட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சங்கர் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் விஜயபாஸ்கர், முன்னாள் மாநில செயலாளர் பிரமானந்த ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.இதைப்போல பூதலூர் வட்ட தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பூதலூர் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் வசந்த குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


Next Story