கிராம நிர்வாக அலுவலர்கள் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

அரக்கோணத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, கிராம நிர்வாக அலுவலர்கள் இரண்டு பேரை நிர்வாக பணி காரணமாக இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அரக்கோணம் தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், இடம் மாற்றம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களின் பணி மாறுதல் ஆணையை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், வருவாய்த் துறை தொடர்பான வாட்ஸ் அப் குழுவில் இருந்து நேற்று காலை முதல் வெளியேறியும், இ-சேவை சான்றுகள் பரிந்துரை மேற்கொள்ளாமலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா கூறுகையில் நிர்வாக பணி காரணமாக கிராமநிர்வாக அலுவலர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொடந்து கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தால் நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Next Story