கிராம உதவியாளர் வேலைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: கலெக்டரிடம் சங்கத்தினர் வலியுறுத்தல்
கிராம உதவியாளர் வேலைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் சங்கத்தினர் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோர் சங்க மாவட்ட தலைவர் பேர்சில், செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலையில் பேரணியாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் செந்தில்ராஜிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், கிராம உதவியாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேலைக்கு விண்ணப்பித்து உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும். இலவச வீட்டுனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவாக வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். மேலும், அரசு அலுவலகங்கள், கோவில்களில் கடைகள் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story