கிராம உதவியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்


கிராம உதவியாளர்கள்   சங்க செயற்குழு கூட்டம்
x

கயத்தாறில் கிராம உதவியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறில் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க மாநிலசெயற்குழ கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு ‌மாநில செயலாளர் எஸ்.அய்யப்பன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட. தலைவர் ஆ.செல்லப்பாண்டியன், நெல்லை மாவட்ட தலைவர் நாராயணன், தென்காசி மாவட்டத் தலைவர் அருணாசலம், விருதுநகர் மாவட்டத்தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாரியப்பன் வரவேற்புரையாற்றினார். தீர்மானங்களை மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்தார். சங்க தலைவர் முத்தையா, மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அமைப்பு செயலாளர் சுப்புராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கனகவல்லி, மாவட்ட துணைத் தலைவர் மாரியப்பன், கயத்தாறு வட்டத் தலைவர் ராஜா பொருளாளர் சண்முகராஜ் மற்றும் 650 கிராம உதவியாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். கயத்தாறு வட்டச் செயலாளர் ராஜா நன்றியுரை கூறினார்.


Next Story