கிராம சபை கூட்டம்
செட்டிகுறிச்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
செட்டிகுறிச்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க வேண்டும். அதற்கு ஊர் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொது மக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து செட்டிகுறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் நோட்டு புத்தகங்கள் வழங்கினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story