கிராம சபை கூட்டம்


கிராம சபை கூட்டம்
x

கிராம சபை கூட்டம்

தஞ்சாவூர்

பிள்ளையார்பட்டி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வைத்தீஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர் சவுமியா ஜனார்த்தனன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயந்தி சதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குழந்தைகள் நலன் சார்ந்த தீர்மானம் மற்றும் இணையவழி மனைபிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் குறித்து ஆலோசிக்கபட்டது. இதில் ஊராட்சி செயலாளர் சக்திவேல் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் தஞ்சை நீலகிரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சரபோஜி நகர் வட்டார சேவை மையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தஞ்சை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வைத்தீஸ்வரன், ஊராட்சி துணை தலைவர் சிங்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story