கிராம சபை கூட்டம்
சாத்தூர், வெம்பக்கோட்டையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூர், வெம்பக்கோட்டையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
சாத்தூர்
சாத்தூர் யூனியனுக்கு உட்பட்ட 46 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
சாத்தூர் ஊராட்சிமன்ற சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், கோட்டாட்சியர் அனிதா, வட்டாட்சியர் வெங்கடேஷ், தனி வட்டாட்சியர் சீதாலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி, 46 பஞ்சாயத்துகளில் அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெம்பக்கோட்டை
வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சத்தியமூர்த்தி பார்வையாளராக கலந்து கொண்டார். விஜய கரிசல்குளத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கங்காளஈஸ்வரி தலைமை வகித்தார். அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குகன் பாறையில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் தலைமையில் தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் இன்னாசி ராஜ் வாசித்தார். சூரார்பட்டியில் கிராம சபை கூட்டம் தலைவர் சீனியம்மாள் தலைமையில் நடைபெற்றது. பார்வையாளராக வெம்பக்கோட்டை யூனியன் துணைத் தலைவர் ராமராஜ் பாண்டியன் கலந்து கொண்டார். மடத்துபட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கோட்டப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி, ஏழாயிரம்பண்ணையில் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், எட்டக்காபட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவள்ளி, விஜயரெங்காபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நித்தியகலா ஆகியோரின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
வாக்குவாதம்
ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங் கொண்டான் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் உமாதேவி வனராஜன், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
தற்போது ரூ.17½ லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து எந்த தகவலும் அளிக்காமல் பணிகள் நடைபெற்று வருவதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக பொது மக்களும் கூச்சலிட்டனர். அப்போது திடீரென அதிகாரிகளுடன் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் அளித்த விளக்கத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.