கிராம சபை கூட்டம்
மேலாத்தூர் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள மேலாத்தூர் கிராம பஞ்சாயத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அலுவலகத்தில் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் தேசிய கொடியினை கிராம பஞ்சாயத்து தலைவர் ஏ.பி.சதீஷ்குமார் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பக்கீர் முகைதீன் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள், பஞ்சாயத்து செயலர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம பஞ்சாயத்து வரவு செலவுகளை ஊராட்சி செயலர் சுமதி வாசித்தார். நிகழ்ச்சியில் கூட்ட பார்வையாளராக ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மாலதி கலந்து கொண்டார்.
பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற முகமது ஷெரீப் என்ற மாணவனுக்கு கிராம பஞ்சாயத்து சார்பில் அதன் தலைவர் சதீஷ்குமார் ரூ.5000 ரொக்க பரிசாக வழங்கினார். இவர் கிராம பஞ்சாயத்தின் துணைத் தலைவர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.