கிராம சபை கூட்டம்
தாணிக்கோட்டகம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேடு அடுத்த தாணிக்கோட்டகம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமையில் நடந்தது.. ஒன்றியகுழு உறுப்பினர் வைத்தியநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் திருமறைச்செல்வன் நன்றி கூறினார்.இதேபோல ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி ஊராட்சியில் தலைவர் ராமையன்,, வாய்மேடு ஊராட்சியில் தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம், .தகட்டூர் ஊராட்சியில் தலைவர் ரேவதி பாலகுரு, வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தலைவர் தமிழ்ச்செல்வி குமார், அண்ணாப்பேட்டை ஊராட்சியில் தலைவர் வனிதாரவிச்சந்திரன், பஞ்சநதிக்குளம் மேற்குஊராட்சியில் தலைவர் மணிமேகலை பாண்டியன் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
Related Tags :
Next Story