கிராம சபை கூட்டம்
பல்வேறு இடங்களில் கிராமசபை கூட்டம் நடந்தது
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் ராமகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் வளர்மதி சேர்மத்துரை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கீதா சுதந்திரபாண்டி முன்னிலை வைத்தார். கூட்டத்தில் காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியை அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடேசன், ஆசிரியர்கள் சுந்தரகுமார், பாஸ்கர், ஆசிரியர் பயிற்றுனர் பாக்கிய செல்வி, கால்நடை டாக்டர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* பரப்பாடி அருகே உள்ள பாப்பான்குளம் பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் பொத்தையடி ஆலங்குளம் கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.முருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இசக்கித்தாய் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஊராட்சி செயலர் சொ.முருகன் நன்றி கூறினார்.
* நாங்குநேரி யூனியன் பருத்திப்பாடு பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் மா.ஊசிகாட்டான் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் துரைப்பாண்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஊராட்சி செயலர் செல்லம்மாள் நன்றி கூறினார்.