கிராம சபை கூட்டம்


கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெடுவயல் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெடுவயல் பஞ்சாயத்து கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவி முப்புடாதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இசக்கி முத்துராஜ் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 2022-2023 ஆண்டுக்கான வேலைகள் தேர்வு செய்தல் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.



Next Story