ஊரணித்தாங்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்


ஊரணித்தாங்கல் ஊராட்சியில்    கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊரணித்தாங்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி ஊராட்சி ஒன்றியம் ஊரணித்தாங்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாரதா ஏழுமலை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது, அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பது, ஊராட்சியை தூய்மையாக பராமரிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக பற்றாளர் இந்துமதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பார்த்திபன், ஊராட்சி உறுப்பினர்கள் நிர்மலா, விசாலாட்சி, காயத்திரி, சிவா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.


Next Story