கடலூர் மாவட்டத்தில்398 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்வருகிற 13-ந்தேதி தொடக்கம்


கடலூர் மாவட்டத்தில்398 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்வருகிற 13-ந்தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 3 Jan 2023 6:45 PM GMT (Updated: 4 Jan 2023 9:36 AM GMT)

கடலூர் மாவட்டத்தில் 398 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 398 கிராம ஊராட்சிகளில் 2020-21 மற்றும் 2021-22-ம் நிதியாண்டுகளுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகளை 2022-23-ம் நிதியாண்டிற்கு 10.10.2022 முதல் 24.3.2023 வரை சமூக தணிக்கை மேற்கொள்ள சிறப்பு கிராம சபை கூட்டம் வருகிற 13-ந்தேதி அன்று 47 கிராம ஊராட்சிகளிலும் (கீரப்பாளையம் ஒன்றியம் - 45 ஊராட்சி மற்றும் மேல்புவனகிரி ஒன்றியம் - 2 ஊராட்சி) நடக்கிறது. 31.1.2023 அன்று 47 கிராம ஊராட்சிகளிலும் (மேல்புவனகிரி ஒன்றியம்- 45 ஊராட்சிகள் மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியம்- 2 ஊராட்சிகள்), 11.2.2023 அன்று 47 கிராம ஊராட்சிகளிலும் (பரங்கிப்பேட்டை ஒன்றியம்- 39 ஊராட்சிகளிலும். விருத்தாசலம் ஒன்றியம்- 8 ஊராட்சிகள்), 24.2.2023 அன்று 75 கிராம ஊராட்சிகளிலும் (விருத்தாசலம் ஒன்றியம்- 43 ஊராட்சிகள் மற்றும் கம்மாபுரம் ஒன்றியம்- 32 ஊராட்சிகள்), 10.3.2023 அன்று 91 கிராம ஊராட்சிகளிலும் (கம்மாபுரம் ஒன்றியம்- 11 ஊராட்சிகள், நல்லூர் ஒன்றியம்- 64 ஊராட்சிகள், மற்றும் மங்களூர் ஒன்றியம்- 16 ஊராட்சிகள் மற்றும் 24.3.2023 அன்று 91 கிராம ஊராட்சிகளிலும் (மங்களூர் ஒன்றியம் - 50 ஊராட்சிகள் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் - 41 ஊராட்சிகள்) சிறப்பு கிராம சபை கூட்டம் காலை 11 மணி அளவில் நடக்கிறது. இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story