குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம்- கலெக்டர் தகவல்
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26-ந் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26-ந் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடத்தஅனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26-ந் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர் வரவு,செலவு திட்டத்தினை ஒப்பிட்டு விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விவரம், தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பயனாளிகள் குறித்து விவாதித்தல், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் போன்றவை குறித்து கிராமசபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.