கிராம சபை கூட்டம்


கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே கிராம சபை கூட்டம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. செங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவி திருமலைச்செல்வி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் பாக்கியலெட்சுமி, கற்குடி பஞ்சாயத்து தலைவர் முத்துபாண்டியன் முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து உதவியாளா் இசக்கி வரவேற்று பேசினார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் வடகாசி, சேர்மக்கனி, பத்மாவதி, வேலம்மாள், வேல்விழி, அம்பிகா, கிராம நிர்வாக அலுவலா் சுடலைக்கனி, சுகாதார ஆய்வாளா் வெங்கடேசன், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளா் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனா் அதனைதொடா்ந்து புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதேபோல் செங்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்களிலும் இந்த முகாம் நடந்தது.

இதில் கட்டளை குடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாஸ்திரி, கற்குடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவானந்தம், கட்டளைகுடியிருப்பு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெசிபுளோரா, கேசவபுரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாணி மற்றும் ஆசிரியர்கள் நல்லசிவம், சிவராமன், லூர்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்



Next Story