கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு


கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு
x

சாலை சீரமைக்காததை கண்டித்து கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே வண்டிச்சோலை ஊராட்சியில் சோலடாமட்டம் கிராமம் உள்ளது. இங்கு 750 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று 75-வது சுதந்திர தினத்தன்று வண்டிச்சோலை ஊராட்சி சார்பில், சோலடாமட்டம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. கிராமத்தில் சாலையை சீரமைக்க ரூ.89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், சீரமைக்காததை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக பொதுமக்கள் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story