கந்திலி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
கந்திலி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு நவம்பர் 1-ந் தேதியை உள்ளாட்சி தினமாக அறிவித்து கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்டது. அதன்படி கந்திலி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கந்திலி போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசு பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, கந்திலி ஊராட்சியில் சுகாதாரம், கல்வி, தூய்மை, உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாவட்டத்திலேயே முதன்மை ஊராட்சியாக மாற்றுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களை பாராட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பரிசுகள் வழங்கினார். கூட்டத்தில் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அப்துல் கரீம் நன்றி கூறினார்.