கபிஸ்தலம் பகுதியில் கிராம சபை கூட்டம்


கபிஸ்தலம் பகுதியில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2023 1:38 AM IST (Updated: 27 Jan 2023 3:55 PM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலம் பகுதியில் கிராம சபை கூட்டம்

தஞ்சாவூர்

கபிஸ்தலம் பகுதியில் கிராமசபை கூட்டம் நடந்தது.

கிராம சபை கூட்டம்

கபிஸ்தலம் பகுதியில் 74-வது குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அந்தந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர். அதனைத்தொடர்ந்து கபிஸ்தலம், சருக்கை, உம்பளப்பாடி, மேலகபிஸ்தலம், ராமானுஜபுரம், சத்தியமங்கலம், உமையாள்புரம், தியாக சமுத்திரம், அலவந்திபுரம், ஆதனூர், கூனஞ்சேரி, திருமண்டங்குடி, ஓலைப்பாடி, கொந்தகை, துரும்பூர், திருவைகாவூர் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. கபிஸ்தலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர் மகாலட்சுமி பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார்.

உறுதிமொழி

கூட்டத்தில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் பற்றியும், ஊராட்சியில் நிர்வாகத்தில் உள்ள வரவு செலவு கணக்கு பற்றியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் குறித்தும், நடைபெற உள்ள பணிகள் குறித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், பணிதல பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பேராவூரணி ஒன்றியம்

பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் குடியரசு தின விழாவையொட்டி நேற்று தேசிய கொடியினை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

பேராவூரணி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஒன்றிய குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இதில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து நிலை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். கிராம சபை கூட்ட நடவடிக்கைகளை ஒன்றிய ஆணையர்கள் செல்வேந்திரன், தவமணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

களஞ்சேரி ஊராட்சி

களஞ்சேரி ஊராட்சி மன்ற சேவை மைய கட்டட வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். துணை தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி செயலர் மாரிமுத்து வரவு-செலவு அறிக்கை வாசித்தார். தொடர்ந்து பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் சார்பில் ஊராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்தும், தேர்வு செய்யப்பட்டு நடைபெற உள்ள பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டோருக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகள் தொகுப்பு பாக்கெட்டுகள், ஊராட்சி சார்பில் துணிப்பைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.


Next Story