வடக்குமாங்குடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
வடக்குமாங்குடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
அம்மாப்பேட்டை ஒன்றியம் வடக்குமாங்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார். அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், துணைத்தலைவர் தங்கமணிசுரேஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வபாரதிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்குமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்விகனகராஜ் வரவேற்றார். வடக்குமாங்குடி ஊராட்சியில் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை எனவும், காலனிதெரு உள்பட பல்வேறு சாலைகளை புதுப்பித்து தரவேண்டியும் ஊராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் கால்நடைதுறை இயக்குனர் கண்ணன், வேளாண்மைதுறை உதவி இயக்குனர் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், வடக்குமாங்குடி ஊராட்சிக்கு பெருங்கரை மயான சாலை, பள்ளிவாசல் சாலைகளை புதுப்பிக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்க உள்ளதாக தெரிவித்தார். இதில் பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்டார கிராமவளர்ச்சி அலுவலர் அமானுல்லா, ஊராட்சி துணை தலைவர் அப்துல்நாசர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சிசெயலாளர் கார்த்தி நன்றி கூறினார்.