தூத்துக்குடி நேருகாலனியில் கிராம சபை கூட்டம்
தூத்துக்குடி நேருகாலனியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் மாதாநகர் மெயின் ரோட்டில் தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் நேருகாலனி கிளை தமிழ் மாநில காங்கிரஸ் செயலாளர் ஆறுமுகம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், நேருகாலனி பகுதி மக்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு தினசரி சம்பளம் ரூ.120-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், நேருகாலனியில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story