95 கிராமங்களை மேம்படுத்தும் திட்டம் - உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்


95  கிராமங்களை மேம்படுத்தும் திட்டம் -   உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
x
தினத்தந்தி 4 May 2023 3:28 PM IST (Updated: 4 May 2023 3:28 PM IST)
t-max-icont-min-icon

தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சென்னை,

இந்தியாவில் செயல்படும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்.-ன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு அமைப்பான எச்.சி.எல். அறக்கட்டளை, அதன் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான எச்.சி.எல். (சாமுடே)-ஐ தமிழ்நாட்டின் 95 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா, மற்றும் எச்.சி.எல். அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் அலோக் வர்மா ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

எச்.சி.எல். சாமுடே தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் 1,40,000 பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் நீர்வள மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, பின்தங்கிய குடும்பங்களுக்கு சிறந்த வருமானத்திற்கு வழிவகுக்கும்.


Next Story