மல்லாங்கிணறில் ஊருணி மேம்பாட்டு பணி


மல்லாங்கிணறில் ஊருணி மேம்பாட்டு பணி
x

மல்லாங்கிணறில் ஊருணி மேம்பாட்டு பணியினை அமைச்சர் ஆய்வு செய்தார்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள சின்னக்குளம் ஊருணியில் கழிவுநீர் தேங்கி அசுத்தமாக இருந்தது. ஆதலால் சின்னக்குளம் ஊருணியை மேம்பாடு செய்ய வேண்டும் என்று மல்லாங்கிணறு பேரூராட்சி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவின் பேரில் சின்னக்குளம் ஊருணியை கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் 2022- 2023-ம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.82.30 லட்சம் மதிப்பில் மேம்பாடு செய்ய உத்தரவு வழங்கப்பட்டது. தற்போது ஊருணி தூர்வாரும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இந்த பணியினை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மல்லாங்கிணறு பேரூராட்சி சேர்மன் துளசிதாஸ், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், துணைத்தலைவர் மிக்கேலம்மாள், செயல் அலுவலர் அன்பழகன், இளநிலை பொறியாளர் கணேசன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story