விபத்தில் கிராம உதவியாளர் பலி
விபத்தில் கிராம உதவியாளர் பலியானார்.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் கொங்கன்குளத்தை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 45). இவர் சங்கரபாண்டியாபுரத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இவர் பணி முடித்து விட்டு மோட்டார்சைக்கிளில் ஏழாயிரம்பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காட்டு பெருமாள் கோவில் அருகில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சுப்புராஜ் ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுப்புராஜின் மனைவி மல்லிகா அளித்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story