கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
கரூர்
நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் இசபில்லா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார், கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் ராஜன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story