கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க கூட்டம்
நாகையில் கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க கூட்டம்
தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க கூட்டம் நாகையில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வி தலைமை தாங்கினார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் சங்க மாவட்ட தலைவர் லெட்சுமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, நிலுவை தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை காவலர் பணியிடங்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்கள் காலமுறை மூலம் ஊதியம் பெறுவது மாற்றப்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு இணையான ஊதியம் ஊராட்சி மூலம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி சென்னையில் தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் முதல் கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்துவது. இரண்டாம் கட்டமாக ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி மத்திய அமைச்சரை சந்தித்து கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.