உத்தமர் காந்தி விருது பெற கிராம ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம்


உத்தமர் காந்தி விருது பெற கிராம ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம்
x

உத்தமர் காந்தி விருது பெற கிராம ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிவிடும் வகையில் சிறப்பாக செயல்படும் ஒரு கிராம ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த ஊராட்சிக்கு உத்தமா் காந்தி விருது தலா ரூ.10 லட்சத்துடன் வருகிற சுதந்திர தினத்தன்று அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தில் முதல்-அமைச்சர் வழங்கி கவுரவிக்கவுள்ளார். இவ்விருதினை பெற பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் http://tnrd.tn.gov.in/ என்ற அரசு இணையதளத்தில் வழிமுறைகளை பின்பற்றி வருகிற 16-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story