நிலக்கோட்டை அருகே வெடி மருந்து குடோன் அமைக்க எதிர்ப்பு


நிலக்கோட்டை அருகே வெடி மருந்து குடோன் அமைக்க எதிர்ப்பு
x

நிலக்கோட்டை அருகே வெடி மருந்து குடோன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே சித்தர்கள்நத்தம் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் வெடி மருந்து குடோன் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் மற்றும், விவசாயிகள் வெடி மருந்து குடோன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக அவர்கள், சித்தர்கள்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முத்தையாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில், சித்தர்கள் நத்தம் பகுதியில் வெடி மருந்து குடோன் அமைக்கக்கூடாது. அவ்வாறு வெடி மருந்து குடோன் அமைத்தால் இப்பகுதியில் உள்ள விவசாய பயிர்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி சுற்றுச்சூழல் மாசுபடும். இதனால் பொதுமக்களுக்கும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி மன்ற தலைவர், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வெடி மருந்து குடோன் அமைப்பதற்கு அரசு எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது என கோரிக்கை வைத்து, அந்த கோரிக்கை மனுவை திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.


Next Story