கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாநாடு


கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாநாடு
x

சங்கரன்கோவிலில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாநாடு நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் விசுவ இந்து பரிஷத், கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் ஆவுடைநாயகம் தலைமை தாங்கினார். விசுவ இந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் கந்தசாமி, பூசாரிகள் பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், இணை அமைப்பாளர்கள் ஆறுமுகம், சுரேஷ், நகர அமைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம், விசுவ இந்து பரிசத் மாநில தலைவர் கோபால், பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், அன்னபூர்ணபுரம் ஆஞ்சநேயர் மடாலயம் ராகவானந்த சுவாமி, பனையூர் சிவாலய நித்தியானந்த சரஸ்வதி ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம், ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம் நிருபர்களிடம் கூறுகையில், ''சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகளாவதால், அரசு சார்பில் விழா நடத்த வேண்டும்'' என்றார்.


Next Story