கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம்


கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம்
x

திண்டுக்கல்லில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். அருள்வாக்கு அருள்வோர் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் சாமி முன்னிலை வகித்தார். பூசாரிகள் பேரவையின் மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, திண்டுக்கல்லில் வருகிற 19-ந்தேதி கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் நடைபெறும் மாவட்ட மாநாட்டில் பேரவை நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். அந்த மாநாட்டில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்குவது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். இதையடுத்து பேரவை வளர்ச்சி பணிகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story