கிராம உதயம் வெள்ளி விழா


கிராம உதயம் வெள்ளி விழா
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கிராம உதயம் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்பிக் நகர்:

கிராம உதயம் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, சிறப்பான தொண்டுகள் புரிந்த கிராம பெண்களுக்கு அப்துல் கலாம் விருதுகள் வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் 2000 துணிப்பைகள் வழங்கும் விழா தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத ்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு திரைப்பட நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். கிராம உதயம் அமைப்பின் மேல ஆழ்வார்தோப்பு கிளை மேலாளர் வேல்முருகன், தனி அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் வரவேற்றார்.

கிராம உதய பகுதி பொறுப்பாளர்கள் கண்ணன், ஆறுமுகவடிவு, பிரேமா, முருகசெல்வி, ஆரியநாச்சியார், முத்துசெல்வன், ஆனந்தசெல்வன், விஜயா ஆகியோர் கருத்துரை வழங்கினர். கிராம உதயம் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான சுந்தரேசன் நன்றி கூறினார்.

விழாவில் சிறப்பாக தொண்டுகள் புரிந்த கிராமப்புற பெண்களுக்கு அப்துல்கலாம் விருதுகளையும், மரக்கன்றுகளையும் லட்சுமி ராமகிருஷ்ணன் வழங்கினார்.


Next Story