கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயற்சி
விருவீடு போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.
திண்டுக்கல்
விராலிமாயன்பட்டி, நடக்கோட்டை, சென்மார்பட்டி, தருமத்துப்பட்டி விருவீடு, நிலக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விருவீடு போலீஸ் நிலையம் முன்பு நேற்று திரண்டனர். பின்னர் அவர்கள் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித் துறையோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வத்தலக்குண்டு-உசிலம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story