காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்


காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்
x

காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்

நாகப்பட்டினம்

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

கீழ்வேளூர் ஒன்றியம் வெண்மணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக வெண்மணி, மேல வெண்மணி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து நேற்று கீழ்வேளூர் - கச்சனம் நெடுஞ்சாலையில் வெண்மணி ஆர்ச் பகுதியில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், வெண்மணி ஊராட்சி் தலைவர் மகாதேவன் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குடிநீர் பிரச்சினை குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் கீழ்வேளூர்- கச்சனம் நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story