கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகை
x

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தொட்டம்பட்டி கிராம விவசாய சங்க தலைவர் எஸ்.காசிராமர் தலைமையில் கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொட்டம்பட்டி முதல் முள்ளுப்பட்டி வரை அரசு வண்டிப்பாதை போடுபட்டி வழியாக செல்கிறது. இந்த பாதையையும், போடுபட்டி கிராம மாலில் அரசு புறம்போக்கு இடத்தையும் தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமித்து, சோலார் பேனல்களை அமைத்துவிட்டனர்.

இதனால் எங்கள் நிலங்களுக்கு செல்ல பாதை இல்லை. இது தொடர்பாக எட்டயபுரம் தாசில்தாரிடம் மனு வழங்கி உள்ளோம். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் செல்வதற்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. பின்னர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் இசக்கி ராஜூவை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story