மானாமதுரை மின்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
மானாமதுரை மின்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
சிவகங்கை
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் கிராமம் உள்ளது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே குறைந்த மின்னழுத்தம் காரணமாக டி.வி., பிரிட்ஜ், குடிநீர் மோட்டார் உள்ளிட்டவற்றை இயக்க முடியாமல் கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்களும் அடிக்கடி பழுதாகி வந்தன. கடந்த 4 நாட்களாக முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. போதிய ஊழியர்கள் இல்லை என கூறி பழுதை மின்வாரியம் சரி செய்யவே இல்லை என கூறப்படுகிறது. பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நேற்று ராஜகம்பீரத்தைச் சேர்ந்த கிராமமக்கள் மானாமதுரை துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story