சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வடமதுரை போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை


சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வடமதுரை போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
x

சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வடமதுரை போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள ஆண்டியபட்டியில் 450 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஆண்டியபட்டியில் உள்ள தனியார் நிலத்தில் சோலார் பேனல் அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சோலார் பேனல்களுக்கு உயர் அழுத்த மின்கம்பிகளை கொண்டு செல்வதற்காக மின் கம்பங்கள் குடியிருப்பு பகுதிகளின் நடுவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல் விவசாய பகுதிகளில் சோலார் பேனல் அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆண்டியபட்டி கிராம மக்கள் நேற்று வடமதுரை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் கிராம மக்கள் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story