திருவெண்ணெய்நல்லூர் அருகேஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


திருவெண்ணெய்நல்லூர் அருகேஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெண்ணைவலம் ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, துணைத் தலைவர் பசுபதி மற்றும் கிராம மக்கள் அங்குள்ள கடலூர் - சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபால கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி செயலாளர் கணேசமூர்த்தி, இங்கு நீண்டகாலமாக வேலை பார்த்து வருகிறார். இவர் சரியான முறையில் பணி செய்வதில்லை. எனவே அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறினர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் பெண்ணைவலம் ஊராட்சி செயலாளர் கணேசமூர்த்தி உடனடியாக பாவந்தூர் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் பாவந்தூரில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த நாவப்பன் பெண்ணைவலம் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.


Next Story