கிராம மக்கள் சாலைமறியல்
கிராம மக்கள் சாலைமறியல்
வலங்கைமான்
வலங்கைமானை அடுத்த நாகங்குடி கிராமம் பெரிய தெரு பகுதியில் வசித்து வரும் சிவா, வீரய்யன் ஆகியோரின் குடிசை வீடுகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த மாணவர்களின் பாடபுத்தகங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்தநிலையில் நேற்று அப்பகுதி பொதுமக்கள் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கும்பகோணம் மன்னார்குடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்ததும் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.