கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்


கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
x

வந்தவாசி அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வந்தவாசி-ஆரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வந்தவாசி-ஆரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கல் குவாரி

வந்தவாசியை அடுத்த ஆனைபோகி ஊராட்சிக்கு உட்பட்ட மேல்செம்பேடு கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்காக சென்னையை சேர்ந்த நிறுவனம் இடம் வாங்கி அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்காக தீர்மானம் நிறைவேற்றி தரக் கோரி ஆனைபோகி ஊராட்சி மன்றத்தை அந்த நிறுவனம் அணுகியுள்ளது.

இது குறித்து தகவல் பரவவே அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கல் குவாரி அமைத்தால் விவசாயம் உள்பட பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதற்கு அனுமதிக்கக்கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

மறியல்

இந்த நிலையில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆனைபோகி மற்றும் மேல்செம்பேடு கிராம மக்கள் வந்தவாசி -ஆரணி சாலை, கிருஷ்ணாபுரம் கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தகவலறிந்து அங்கு சென்ற வடவணக்கம்பாடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கூறினர்.இதில் சமரசம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் வந்தவாசி-ஆரணி சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story