காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்த கிராம மக்கள்
குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் வந்து கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் வந்து கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
குடிநீர் பிரச்சினை
வெம்பக்கோட்டை யூனியன் இ.ராமநாதபுரம் கிராமம் கிழக்கு தெருவில் உள்ள மக்களுக்கு குடிநீர் வசதி செய்துதரப்படாத நிலை உள்ளது.
இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குழி தோண்டி குடிநீர் எடுத்தாலும் கழிவுநீர்கலந்து வருவதாகவும் எனவே உடனடியாக குடிநீர் வசதி செய்துதர வேண்டுமெனக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் காலி குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர்.
மின் கட்டண உயர்வு
தமிழ் மாநில காங்கிரசின் மாவட்ட தலைவரும், பள்ளப்பட்டி பஞ்சாயத்து துணை தலைவருமான ராஜபாண்டியன் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், மின் கட்டணம் 10 சதவீதம் முதல் 21 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆதலால் இந்த மின் கட்டணத்தை திரும்ப பெற அரசுக்கு பரிந்துரை செய்யக்கோரியிருந்தார்.
வனவிலங்குகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வனத்துறையினர் வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு அளிப்பதிலேயே கவனம் செலுத்தும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் வந்து கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
தேச மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பரத்ராஜா இனாம் ரெட்டியபட்டியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வசதியாக காலை 7.30 மணிக்கு மருளூத்து வரை வரும் பஸ்சை இனாம் ரெட்டியபட்டி வரை நீட்டிக்க வேண்டும் எனக்கோரியுள்ளார்.