கிராமமக்கள் சமையல் செய்து போராட்டம்


கிராமமக்கள் சமையல்  செய்து போராட்டம்
x

கடையம் அருகே கிராமமக்கள் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

தென்காசி

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஏ.பி.நாடானூரில் கடந்த 1984-ம் ஆண்டு 9 பேருக்கு தமிழக அரசின் சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த நிலத்தை சிலர் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தற்போது அந்த நிலத்தைச் சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்வேலியை அகற்றக்கோரியும் அப்பகுதி மக்கள் நேற்று அங்குள்ள கோவில் அருகில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, தாசில்தார் பரிமளா, கிராம நிர்வாக அலுவலர் சுதர்சன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அந்த நிலத்தில் கம்பிவேலியை அகற்றும் வரையிலும் போராட்டத்தை தொடர்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு, இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.


Next Story